புளிக் குழம்பு
Share
புளிக் குழம்பு
புளிக் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் 100 கிராம்
சீரகம் (1/4 தேக்கரண்டி)
மிளகு (1/4 தேக்கரண்டி)
வெந்தயம்(சிறிது), இவற்றை சிறிது எண்ணை விட்டு வதக்கி, இத்துடன்
தேங்காய் துருவல் (11/2 மேசைக் கரண்டி) சேர்த்து, விழுதாக அரைத்துக்
கொள்ளவும்.
சின்ன வெங்காயம் (50 கிராம்)
தக்காளி(1)
மற்றும் விருப்பமான காய்கறி (கத்தரி, வெண்டைக்காய், சுரைக்காய்
போன்றவை) ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
Method
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணை விட்டு, கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம்
போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய் (கத்தரி,
வெண்டைக்காய் போடுவதாக இருந்தால் இவற்றை சிறிது எண்ணை
விட்டு வதக்கி கொள்ள வேண்டும்) சேர்த்து வதக்கி,
மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி), மிளகாய்த்தூள் (1 தேக்கரண்டி),
மல்லித்தூள் (2 தேக்கரண்டி), அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
எலுமிச்சையளவு புளியை ஊற வைத்து, கரைத்து, குழம்பில் ஊற்றி,
தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மல்லித்தழை தூவி இறக்கவும்.
Hits: 1663, Rating : ( 5 ) by 1 User(s).